''குபேரா''வில் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா... காரணம் என்ன தெரியுமா?

''குபேரா''வில் தனுஷின் நடிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை,
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சேகர் கம்முலா இயக்கிய 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று, உலகளவில் ரூ. 125 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் முத்திரையைப் பதித்துள்ளது.
இந்நிலையில், 'குபேரா' படத்தின் மையக் கதாபாத்திரமான தேவாவின் வேடத்தில் தனுஷ் நடிப்பதற்கு முன்பு, அந்த வேடம் முதலில் மற்றொரு தென்னிந்திய நட்சத்திரமான விஜய் தேவரகொண்டாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், பிச்சைக்காரராக நடிப்பது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம் என்பதை காரணம் காட்டி, விஜய் தேவரகொண்டா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இறுதியில், அந்த கதாபாத்திரம் தனுஷுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தனுஷின் நடிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ''லைப் இஸ் பியூட்டிபுல்'' படத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






