கைதி பட பாணியில் உருவாகும் விஜய் தேவரகொண்டாவின் படம்

விஜய் தேவரகொண்டாவின் 12-வது படம் 'கைதி' படத்தை போல் பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
கைதி பட பாணியில் உருவாகும் விஜய் தேவரகொண்டாவின் படம்
Published on

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் விஜய் தேவரகொண்டாவின் புதிய படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. 

விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்த படம் கைதி படத்தை போல் பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. விறுவிறுப்பான இந்த கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் அனிருத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com