அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த விஜய் ரசிகர்கள்...!

அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர்.
அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த விஜய் ரசிகர்கள்...!
Published on

பட்டுக்கோட்டை,

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், படங்களின் ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டு இருந்தது. இரண்டு படங்களின் டிரைலர்களிலும் குறிப்பிடப்படாத ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஜனவரி 11-ம் தேதி( நாளை) அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசும் மோதுகின்றன. படம் வெளியாக இன்னும் சிலமணி நேரங்களே உள்ளன இரண்டு படங்களின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விஜய், அஜித் திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாவதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில், அனைவருக்கும் ஆச்சரியமான நிகழ்வாக பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதாவது, பட்டுக்கோட்டையில் அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது அனைவருகும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com