மீண்டும் நடிக்கிறார் விஜய் - ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, 'ஜனநாயகன்' திரைப்படம்தான் தனது கடைசிப் படம் என்று விஜய் அறிவித்திருந்தார்.
மீண்டும் நடிக்கிறார் விஜய் - ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
Published on: 

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால், அவர் இனி திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

கடைசி படம் 'ஜனநாயகன்'

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, 'ஜனநாயகன்' திரைப்படம்தான் தனது கடைசிப் படம் என்று விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்து அவரை திரையில் காண முடியாதா என்ற ஏக்கத்திலும் ரசிகர்கள் இருந்து வந்தனர்.

அரசு விளம்பரத்தில் நடிக்கும் விஜய்?

இந்த நிலையில், விஜய் மீண்டும் கேமரா முன்பு தோன்ற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட உள்ள விளம்பரம் ஒன்றில் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை இயக்குநர் கவுதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் படப்பிடிப்பு

இந்த விளம்பரத்துக்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த விஜய், அரசு விளம்பரத்தின் மூலம் மீண்டும் கேமரா முன்பு தோன்ற இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X