''இந்தியாவில் ஷாருக்கானுக்குப் பிறகு விஜய்தான் பெரிய 'என்டர்டெயினர்' '' - ரியாஸ் கான்

ஒரு நேர்காணலில், ரியாஸ் கான் தமிழ் நட்சத்திரம் விஜய்யை பற்றி பேசினார்.
சென்னை,
பெரும்பாலும் மலையாளப் படங்களில் நடித்துள்ள ரியாஸ் கான், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும் அவர் அனைத்துத் துறைகளிலும் பல நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், பழைய ஒரு நேர்காணலில், ரியாஸ் கான் தமிழ் நட்சத்திரம் விஜய்யை பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர், ஷாருக்கானுக்குப் பிறகு விஜய்தான் மிகப்பெரிய 'என்டர்டெயினர்' என்று கூறினார். அவர் கூறுகையில்,
"நாங்கள் ஒன்றாக நடித்து நீண்ட நாட்களாகிவிட்டாலும், நான் விஜய்யுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர் மிகவும் அடக்கமான நபர். ''பத்ரி'' படத்தில் நான் அவரது சகோதரராக நடித்திருந்தேன். சூராவிலும் அவருடன் நடித்திருந்தேன். விஜய் மிகப்பெரிய இந்திய நட்சத்திரம். ஷாருக்கானுக்குப் பிறகு, பெரிய 'என்டர்டெயினர் அவர்தான்'' என்றார்.
Related Tags :
Next Story






