விஜய் மிகவும் அமைதியாக இருப்பார்: நடிகை மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து பேட்டியில் பேசியுள்ளார்.
விஜய்  மிகவும் அமைதியாக இருப்பார்: நடிகை மாளவிகா மோகனன்
Published on

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து பல மொழிகளில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் மாளவிகா மோகனன் தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விஜய் எனக்கு சிறந்த நண்பர். அவரது வெற்றி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். விஜய்யை முதன்முதலாக படப்பிடிப்பு தளத்தில் தான் சந்தித்தேன். அப்போது எங்களுக்கிடையே ஹாய் சொல்வது போல் தான் நட்பு இருந்தது. விஜய் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். மிகவும் கூர்ந்து கவனிப்பார். நாளடைவில் அவர் எனக்கு சிறந்த நண்பராக ஆனார். எப்போது வேண்டுமானாலும் அழைத்து பேசக்கூடிய ஒருவர் அவர். அது மிகவும் இனிமையானது. ஏனென்றால் எல்லோரும் அப்படி செய்வதில்லை. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com