சீரடி சாய்பாபா கோவிலுக்கு புறப்பட்ட நடிகர் விஜய்

'தி கோட்' திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
Vijay left for Saibaba Temple in Shirdi
Published on

சென்னை,

நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பின்போதே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதிசெய்தார். அதனைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தார். சமீபத்தில் கட்சியின் கொடியும் அறிமுகமானது. இதனைத்தொடர்ந்து, கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

அடுத்த வாரம் 'தி கோட்' திரைக்கு வரவுள்ள நிலையிலும், த.வெ.க கட்சி மாநாடு அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையிலும் நடிகர் விஜய் தற்போது சீரடி சாய்பாபா கோவிலுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். அவருடன், த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com