இயக்குநர் விஜய் மில்டனின் புதிய பட டைட்டில் வெளியீடு


தினத்தந்தி 29 Aug 2025 12:20 PM IST (Updated: 29 Aug 2025 12:22 PM IST)
t-max-icont-min-icon

விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜ் தருண் நடிக்கும் படத்திற்கு ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது!

சென்னை,

விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் ராப் பாடகர் வேடன் இணைந்திருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

'கோலி சோடா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் விஜய் மில்டன், புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் மூலம் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் தனது ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார்

சாம் சி எஸ் இசையமைக்கிறார் இந்த படத்திற்கு காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் என பெயரிட்டுள்ளனர் இது கோலிசோடா பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகிறது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராப் பாடகர் வேடன் இதில் ஒரு பாடலை பாடுகிறார். இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் படம் ரிலீஸாகிறது.

1 More update

Next Story