விஜய் ஜோடியாக நடித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி- பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தனது மனதில் இருக்கும் ஆசையை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விஜய் ஜோடியாக நடித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி- பூஜா ஹெக்டே
Published on

2012-ம் வெளியான முகமூடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத்தொடர்ந்து தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூஜா ஹெக்டே, தமிழ் சினிமா பயணம் குறித்து பேசினார். அதில், எனது சினிமா பயணம் தொடங்கியது தமிழில்தான். ஆனாலும் முகமூடி' படத்திற்கு பிறகு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. ரோலர் கோஸ்டர்' போல எனது திரை வாழ்க்கையில் மேடு-பள்ளங்கள் நிறைய இருந்தன. பல போராட்டங்களுக்கு பிறகே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்து எனக்கு கிடைத்தது.

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் விஜய் ஜோடியாக நடித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

இவ்வாறு பூஜா ஹெக்டே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com