

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில், அரபிக்குத்து... என்று தொடங்கும் பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. அனிருத் பாடி, இசையமைத்து இருக்கிறார். விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள அரபிக்குத்து... பாடலை எழுதியவர், சிவகார்த்திகேயன்.
இதற்காக சிவகார்த்திகேயனுக்கு விஜய் போன் செய்து நன்றி சொன்னார். பாட்டு பிரமாதம் என்று பாராட்டினார். உனக்கு அரபி மொழி கூட தெரியும் போல... என்று தமாஷ் செய்தார்.