விஜய் சேதுபதி நடித்த "ஏஸ்" படத்தின் வசூல் இத்தனை கோடியா?

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படம் கடந்த 23ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் சேதுபதி நடித்த "ஏஸ்" படத்தின் வசூல் இத்தனை கோடியா?
Published on

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இப்படத்தை உருவாக்கியது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றது.

விஜய் சேதுபதி 51-வது படமான 'ஏஸ்' திரைப்படத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். 'ஏஸ்' படம் கடந்த 23ம் தேதி வெளியானது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 10 நாளில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பெரியளவில் புரமோஷன் செய்யப்படாததே அதன் வசூல் குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி 'ஏஸ்' திரைப்படம் ரிலீஸ் ஆனதே நிறைய பேருக்குத் தெரியவில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com