கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி ?

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Vijay Sethupathi in Krithika Udhayanidhi's direction?
Published on

சென்னை,

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை'. இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காமல் ஓரளவு ரசிக்க வைத்தது என்றே சொல்லலாம்.

இதனைத்தொடர்ந்து, கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பான கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இப்படத்தை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், 'காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனதால் இந்த படம் தொடங்காமல் இருந்ததாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்க போவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com