விஜய் சேதுபதியின் ’டிரெயின்’ ரிலீஸ் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

’டிரெயின்’ படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார்.
Vijay Sethupathi - Myskkin’s Train planning to release on Nov 28th
Published on

சென்னை,

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரெயின் திரைப்படத்தை வரும் 28ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், நடிகை சுருதிஹாசன் , நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷ்ன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார். ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் டார்க் திரில்லர் ஜானரில் 'டிரெயின்' படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com