கார்த்தி படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தியின் புதிய படத்தில் இருந்து கால்ஷீட் இல்லாத காரணத்தால் விஜய் சேதுபதி விலகி விட்டார்.
கார்த்தி படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனான கார்த்தி நடித்த 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டார். வில்லன் நடிகருக்கான தேடலில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com