‘ரீ யூனியன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி

கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தில் அருள் தாஸ் நாயகனாக நடித்துள்ளார்.
‘ரீ யூனியன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருப்பவர் அருள்தாஸ். இவர் தற்போது கதாநாயகனா ‘ரீ யூனியன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சாட்ஸ் ரெக்ஸ் இயக்கியுள்ளார். இதில் ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன்,சுப்பிரமணியன்,ஜெமினி மணி,சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன் ,காக்காமுட்டை ரமேஷ், பூவையார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விக்கி மேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்திருக்கிறார். ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

தற்போது இந்த படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com