தமிழில் முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் 'மெர்சல்' பட நடிகை?

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
Vijay Sethupathi to pair up with Nithya Menen for the first time in his new project?
கோப்புப்படம்
Published on

சென்னை,

விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் 'மகாராஜா'. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். இந்தபடத்தை நித்திலன் சாமிநான் இயக்கினார். விரைவில் இவர் நடித்துள்ள ஏஸ் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தபடத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பாண்டிராஜ், விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் முதல் படமாகும். இதற்கு முன் பாண்டிராஜ் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய 'எதற்கும் துணிந்தவன்' படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதற்கிடையில் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் கதாநாயகியாக நித்யா மேனனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 'ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் தமிழில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படமாக இது அமையும். ஏற்கனவே இவர்கள் இருவரும் மலையாளத்தில் 19 (1) (ஏ) என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com