விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.
விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'மகாராஜா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படம் திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 'மகாராஜா' திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், 'மகாராஜா' திரைப்படம் ரிலீஸ் ஆவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் படம் வெளியாகும் தேதியை படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com