விஜய் சேதுபதியின் “இஞ்சி வெல்லம்” படப்பிடிப்பு நிறைவு

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதியின் “இஞ்சி வெல்லம்” படப்பிடிப்பு நிறைவு
Published on: 

விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

‘இஞ்சி வெல்லம்’

மணிரத்னம் இயக்கும் இப்படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் காதல் கதைக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. மணிரத்னம் மீண்டும் காதல் கதைக்களத்துக்கு திரும்பியிருப்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு

‘இஞ்சி வெல்லம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் தொடங்கியது. அங்கு ஹவுரா பாலத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் பாடல் காட்சிக்கு நடித்து வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த நிலையில், ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் படப்பிடிப்பு 90 நாள்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் ரிலீஸ் அப்டேட்

கதையும் கொல்கத்தாவில் நடைபெறுவது போல் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. படத்தின் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பு நிறைவு அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com