விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடர் டீசர் வெளியீடு

மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடர் வரும் 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடர் டீசர் வெளியீடு
Published on

விஜய் சேதுபதி முத்து என்கிற காட்டான் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவாசாயி’ போன்ற மாபெரும் படைப்பை உருவாக்கிய இயக்குநர் ஆவார். இத்தொடரை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார். இத்தொடரில் விஜய் சேதுபதி மற்றும் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். .

இந்த நிலையில், ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரின் டீசர் வெளியானது. இதில், முண்டம் இல்லாத விஜய் சேதுபதியின் தலை காட்டப்படுகிறது. மேலும், வசனம் வாயிலாக விஜய் சேதுபதி, ‘என் முண்டத்தைக் கண்டுபிடிங்க’ என்கிறார்.

இத்தொடர் வருகிர மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com