விஜய் சேதுபதியின் "தலைவன் தலைவி" டிரெய்லர் வெளியீடு

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள 'தலைவன் தலைவி' படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.
Published on

சென்னை,

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ள படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.

சமீபத்தில் இந்த படத்திலிருந்து 'பொட்டல முட்டாயே' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'தலைவன் தலைவி' படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.சந்தோஷ் நாராயணன் இசையில், விவேக் வரிகளில் பிரதீப், தீ இணைந்து பாடிய 'ஆகாச வீரன்' பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் 'தலைவன் தலைவி' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல், பிரிவு சண்டை, விவாகரத்து, நட்பு, புரிதல் என அனைத்தையும் பற்றி பேசியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com