இறுதிக்கட்டத்தில் விஜய்சேதுபதியின் 'டிரெயின்' படப்பிடிப்பு!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்டத்தில் விஜய்சேதுபதியின் 'டிரெயின்' படப்பிடிப்பு!
Published on

சென்னை,

கலைப்புலி எஸ் தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிரெயின்' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கியது. ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவமாக இப்படம் உருவாகி வருவதாகத் தகவல். நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குநர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ள படமென்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தில் வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய், அருண் ஆகியேர் நடித்து வருகின்றனர். டெவில் படத்திற்கு பிறகு இந்தப் படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மிக தீவிரமாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது நடிகர் விஜய் சேதுபதி அடர்ந்த தாடியுடன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் முன்னதாக உருவாகியுள்ள 'பிசாசு 2' படத்திற்கு முன்னதாக 'டிரெயின்' படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com