

சென்னை,
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி உருவான இப்படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 2018 அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 96 திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 8 ஆண்டுகள் கழித்து 96 திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, 96 திரைப்படம் வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.