விஜய் படப்பிடிப்பு நிறுத்தம்

விஜய் நடிக்கும் ‘லியோ' படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் படப்பிடிப்பு நிறுத்தம்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படப்பிடிப்பு காஷ்மீரில் சமீபத்தில் தொடங்கியது. விஜய் மற்றும் இதர நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தனி விமானத்தில் சென்று படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்கள். அங்கு கடும் குளிர் நிலவுவதால் படக்குழுவினருக்கு சில அசவுகரியங்கள் ஏற்பட்டு உள்ளன.

சில தினங்களுக்கு முன்பு விஜய் நடித்த காட்சி இணைய தளத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ செல்போனில் படம்பிடித்து வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். இதனால் கடுப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை நிறுத்தி விசாரணை நடத்தினார். அத்துடன் படப்பிடிப்பு அரங்குக்கு செல்போன் கொண்டு செல்லவும் தடை விதித்தனர்.

பாதுகாவலர்களை நிறுத்தி கடும் சோதனைக்கு பிறகே படக்குழுவினர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படக்குழுவை சேர்ந்தவரின் வீட்டில் நடந்த துக்க சம்பவம் காரணமாக படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com