விஜய் நல்லா இருக்கணும்.. இயக்குனர் பாலா பேச்சு

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் அறிமுக விழா இயக்குனர் பாலா கலந்து கொண்டு பேசினார்.
விஜய் நல்லா இருக்கணும்.. இயக்குனர் பாலா பேச்சு
Published on

சென்னை,

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ச் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக பாலாவும் கலந்து கொண்டார். இந்த விழாவில் பாலா பேசியதாவது: இயக்குனர் விஜய்க்கு நான் குரு இல்லை. எனக்குதான் விஜய் குரு. ஏனென்றால், தொழில் மட்டும் இல்லை. ஜூனியராக இருக்கலாம். ஒரு தொழிலில் எவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்த குரு விஜய்தான். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விஜய் எனக்கு தாயுமானவன். என்னோட நல்லது கெட்டதுக்கு வந்து நின்று. அதில் பங்கெடுத்து உடன்பிறப்பா.. தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக்கொள்கிறார். நான் நல்லா இருக்கனும்னு விஜய் நினைக்கிறார். விஜய் நல்லா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com