விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல்..!

விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல்..!
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் 'லியோ' திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 'லியோ' திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் கூடியதையடுத்து, 'லியோ' திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com