விஜய்யின் காதலி, மனைவி, தாய் என 3 கதாபாத்திரங்களிலும் நடித்த ஒரே நடிகை - யார் தெரியுமா?

விஜய்யுடன் அதிக படங்களில் நடித்தவர் திரிஷா.
விஜய்யின் காதலி, மனைவி, தாய் என 3 கதாபாத்திரங்களிலும் நடித்த ஒரே நடிகை -  யார் தெரியுமா?
Published on

சென்னை,

விஜய்யின் அரசியல் பயணம் ஒருபுறம் பரபரப்பாக இருக்க, அவரது சினிமா வாழ்க்கை குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

விஜய்யுடன் அதிக படங்களில் நடித்தவர் திரிஷா (கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ மற்றும் கோட் படத்தில் ஒரு பாடல்). ஆனால், விஜய்க்கு காதலி, மனைவி மற்றும் தாய் என மூன்று கதாபாத்திரங்களிலும் நடித்த பெருமை புன்னகை அரசி சினேகாவையே சாரும்.

கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான வசீகரா படத்தில் விஜய்யின் தோழியாகத் தொடங்கி, காதலியாக மாறி, இறுதியில் மனைவியாக நடித்திருப்பார் சினேகா.

Also Read
‘திராவிட கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்’ - விஜய்க்கு அட்வைஸ் கூறிய நடிகை
விஜய்யின் காதலி, மனைவி, தாய் என 3 கதாபாத்திரங்களிலும் நடித்த ஒரே நடிகை -  யார் தெரியுமா?

பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் சினேகா - விஜய் மீண்டும் இணைந்தனர். இதில் தந்தை காந்தி மற்றும் மகன் ஜீவன் என விஜய் இருவேடங்களில் நடித்தார். இதில் தந்தை விஜய்க்கு மனைவியாகவும், மகன் விஜய்க்கு தாயாகவும் சினேகா நடித்து அசத்தியிருப்பார்.

சினேகாவைப் போலவே 'மெர்சல்' படத்தில் நித்யா மேனனும் விஜய்க்கு மனைவியாகவும், தாயாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com