விஜய் விக் பயன்படுத்துகிறார்...! வம்பிழுத்த பயில்வான் ; ரசிகர்கள் கடும் கோபம்...!

நடிகர் பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். அது ஒரு சில உண்மைகளாகவும், சில வதந்தியாகவும் இருக்கும்.
விஜய் விக் பயன்படுத்துகிறார்...! வம்பிழுத்த பயில்வான் ; ரசிகர்கள் கடும் கோபம்...!
Published on

சென்னை

தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது யூடியூப் மூலம் திரையுலக பிரபலங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். சினிமா நட்சத்திரங்கள் குறித்த சில ரகசிய தகவல்களை யூடியூப்பில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

பயில்வானின் பேச்சால் அவர் சிலரால் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. நடிகை ரேகா நாயர், நிர்வாணமாக நடித்ததை விமர்சித்த பயில்வானை பொது இடத்தில் திட்டி, அடித்து உதைத்த சம்பவமும் நடந்துள்ளது.

இவ்வாறு சர்ச்சைகள் தொடர்ந்தாலும் பயில்வான் யூடியூபில் பிரபலங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அப்படித்தான் நடிகர் விஜய் பற்றி பயில்வானின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் விக் பயன்படுத்துவது குறித்து பேசியுள்ளார். விஜய்யின் பேச்சை பார்த்த அவரது ரசிகர்கள் கோபம் அடைந்து உள்ளனர்.

நடிகர் விஜய் குறித்து பயில்வான் பேசிய பேச்சுக்குவிஜய் ரசிகர்கள் அவர் மீது சமூக வலைத்தளங்களில் கண்டத்தை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில், "விஜய் 7 வருடங்களுக்கும் மேலாக விக் அணிந்து படங்களில் நடித்து வருகிறார். அவரது தந்தைக்கு வயதாகிவிட்டாலும் முடி உதிரவில்லை. ஆனால் விஜய்க்கு இந்த வயதில் கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தியதால் முடி உதிர்கிறது. உலகநாயனும் இதே பிரச்சனையை எதிர்கொண்டார். ஆனால் அவர் குணமடைந்தார், வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் மற்றும் அவரது முடி மீண்டும் வளர்ந்தது.

ரஜினிக்கும் முடி உதிர்ந்தது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தலை மொட்டை அடித்துவிட்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆனால் விஜய் அவ்வாறு இல்லை விக்குடனே காட்சி தருகிறார்.சமீபகாலமாக விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதை பார்த்தால் அவரின் தலைமுடி விக் என்பது புரியும் என அந்த வீடியோவில் பயல்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

விஜய்க்கு எதிராக பயல்வான் ரங்கநாதன் கூறியதை விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் பெரும் கருத்துகளையும் டிரோல்களையும் செய்து வருகின்றனர்.

உண்மைக்கு புறம்பாக பயில்வான் ரங்கநாதன் பேசுவதாக விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர். 2021ல் மாஸ்டர் படம் வெளியானபோதும் இப்படி ஒரு சர்ச்சை இருந்தது. அதனை படத்தின் தயாரிப்பாளர் நிராகரித்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com