

சென்னை,
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் 'ப்ளாஸ்ட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
சமீபத்தில் நடிகர் அர்ஜுன் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சென்னையில் பிரபல சினிமா திரையரங்கிற்கு வந்திருந்த நடிகர் அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்வன் படத்துடன் இந்த ஆட்சியை ஒப்பிடுவது மகிழ்ச்சி.. நான் ரீல் முதல்வன். எனக்கு முதல்-அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை இருக்கிறது. நாட்டு மக்களுக்கு 100 சதவீதம் நல்லது செய்வார். அதற்கான அறிகுறிகள் தெரியுது, அதுக்கு டைம் கொடுக்கணும்.
அவரை நான் மீட் பண்ணின அப்போ, 'ரொம்ப பெருமையாக இருக்கு. நம்ம திரைத்துறையிலிருந்து இன்னொரு முதல்-அமைச்சர். கடவுள் அவருக்குப் பெரிய வலிமையைக் கொடுக்கணும். அவர் முன்னால நிறைய பொறுப்புகள் இருக்கு என்றார்.