தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய் சிறப்பான ஆட்சியை கொடுப்பார் - நடிகை ராஷி கண்ணா

தமிழகத்தில் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளதாக நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய் சிறப்பான ஆட்சியை கொடுப்பார் -  நடிகை ராஷி கண்ணா
Published on

நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அஜய் தேவ்கானுடன் இணைந்து ருத்ரா தி ஹெட்ஜ் ஆப் டாக்னஸ் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

புதுவை அண்ணா சாலையில் புதிய நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை ராஷி கண்ணா “புதுவையில் நடைபெற்ற பல திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறேன். தற்போது புதுவையில் புதிய நகைக்கடை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியான நபர் விஜய். மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை அவர் கொடுப்பார்” என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com