விஜய் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஆட்சி செய்வார்- இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

முதல் முயற்சியிலேயே சாதித்த முதல்வராக விஜய் அமர்ந்திருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என ஆர்.வி.உதயகுமார் பாராட்டினார்.
விஜய் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஆட்சி செய்வார்- இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்
Published on
Updated on

சென்னை,

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆர்.வி உதயகுமார், முதல் அமைச்சர் விஜய்யை பாராட்டி பேசியுள்ளார். ஆர்.வி உதயகுமார் கூறியதாவது: " மாபெரும் வெற்றியை மீண்டும் சபையில் நிரூபித்த முதல் அமைச்சர் விஜய்க்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்தும் முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த முதல்வராக விஜய் அமர்ந்திருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரே அடியில் அடித்தது விஜய்தான். நிறையபேர் இதனை ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறார்கள். நிச்சயமாக, இன்னும் 2 தலைமுறைக்கு அவர் இந்த ஆட்சியிலே இருப்பார் என்று நான் உறுதியாக கூறுகிறேன். விஜயிடம் இருக்கும் விவேகம் அளப்பரியது. அந்த விவேகத்திற்கு தோல்வியே கிடையாது. நம்முடைய குடும்பத்திலிருந்து ஒருவர் வரும்போது வாழ்த்துவோம்” இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com