ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்தின் 100-வது படம்


ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்தின் 100-வது படம்
x
தினத்தந்தி 15 April 2025 10:01 AM IST (Updated: 9 Aug 2025 8:13 PM IST)
t-max-icont-min-icon

4கே தரத்தில் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸாகும் விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம்.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன.

அந்த வகையில், விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் 'கேப்டன் பிரபாகரன்'. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு 'கேப்டன்' என்ற அடைமொழி கிடைத்தது. இந்த படத்தில் மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது இப்படம் 4 கே தரத்தில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது. முருகன் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story