விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படத்தின் டீசர் வெளியீடு

சத்யசிவா இயக்கத்தில் விஜய்குமார் நடிக்கும் ‘அறிவு’ படம் வரும் டிசம்பர் 11ம் தேதி வெளியாகவுள்ளது.
விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படத்தின் டீசர் வெளியீடு
Published on: 

சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘அறிவு’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.

‘உறியடி’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜய் குமார். தொடர்ந்து, ‘உறியடி 2’ மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' படத்திற்கு இவர் வசனம் எழுதியிருந்தார். சில ஆண்டுகள் கழித்து ‘பைட் கிளப்', 'எலக்சன்' திரைப்படங்கள் மூலம் ஆக்சன் நாயகன் ஆனார்

பெண்களின் உரிமைகளைப் பேசும் புதிய படம்

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய் குமார் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அறிவு’. இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற மீனவப் பெண் சுபிக்‌ஷா, ‘அறிவு’ படத்தில் நடித்துள்ளார்.

மோட்டிவ்ட்ரோன் புரொடக்ஷன் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படம், பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு நிறைவு

மூணாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மலைக் கிராமங்களில் கல்வியைக் கொண்டு செல்லும் நாயகனை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. சமூகப் பிரச்சினைகளையும் பெண்களின் உரிமைகளையும் பேசும் படமாக ‘அறிவு’ உருவாகியுள்ளதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்குமார் நடிக்கும் ‘அறிவு’ படம் வரும் டிசம்பர் 11ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

டீசர் வெளியீடு

சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘அறிவு’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.

X