'படங்களை பற்றி எதிர்மறையான கருத்துகள் பரப்புவதை நிறுத்துங்கள்' - நடிகை விஜயசாந்தி


Vijayashanthi warns against spreading negativity about films
x

“அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி” படத்தில் நந்தமுரி கல்யாண் ராமுக்கு அம்மாவாக நடிகை விஜயசாந்தி நடித்திருந்தார்.

ஐதராபாத்,

கடந்த 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான "அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி" படத்தில் நந்தமுரி கல்யாண் ராமுக்கு அம்மாவாக நடிகை விஜயசாந்தி நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படவிழா ஒன்றில் பேசிய விஜயசாந்தி, படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். மேலும், சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துகள் பரப்புவதை நிறுத்துமாறும் கூறினார்.

அவர் கூறுகையில், " ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிகள் நிறைந்த கதைதான் இப்படம். எங்களின் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் எதிர்மறையான கருத்துகளை பரப்புவது சரியல்ல. சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளை பரப்புபவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் "என்றார்.

1 More update

Next Story