உடல் உறுப்புகளை தானம் செய்த விஜய்தேவரகொண்டா

ஐதராபாத்தில் நடந்த குழந்தைககள் மருத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொணட விஜய்தேவரகொண்டா தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார்.
உடல் உறுப்புகளை தானம் செய்த விஜய்தேவரகொண்டா
Published on

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். அவரது டியர் காமரேட் தெலுங்கு படமும் தமிழில் வந்தது. குறைந்த படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்து இருக்கிறார். ஆனால் விஜயதேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியான லைகர் படம் படுதோல்வி அடைந்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த குழந்தைககள் மருத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில் விஜய்தேவரகொண்டா கலந்து கொண்டு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார். விஜய்தேவரகொண்டா பேசும்போது, '' பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசின் உதவியாலும் பொதுமக்கள் நன்கொடையாலும் நடப்பதை அறிந்தேன்.

மனிதாபிமான அடிப்படையில் பலர் உறுப்புதானம் செய்கிறார்கள். பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. உடல் உறுப்புகளை வீணாக்க கூடாது. நான் எனது அனைத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளிக்கிறேன்" என்றார். அவரை வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com