விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம்

சாதி வெறிக்கு எதிராக உருவாகியுள்ள புதிய படம், ‘சாயம்.’ இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம்
Published on

மாணவர்கள் இடையே சாதி சாயம் பூசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது, விண்ணப்பத்தில் சாதி, மதம் என்கிற இடத்தில், தமிழன் என்று குறிப்பிட்டேன்.முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என்று கூறியதும், அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில், சாதி என்கிற இடத்தில், தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது.சாதிக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால், இன்னும் 20 வருடங்களில் சாதியே காணாமல் போய்விடும்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

சாயம் படத்தில் கதாநாயகன் அபி சரவணன், தன் பெயரை விஜய் விஷ்வா என்று மாற்றிக் கொண்டார். கதாநாயகி, சைனி. ஒய்ட் லேம்ப் புரொடக்ஷன் தயாரிக்க, அந்தோணிசாமி டைரக்டு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com