''விஜய் நடத்தியது மாநாடு இல்லை, அது...'' - இயக்குனர் அமீர்


Vijays event didnt seem like a Maanaadu... - Director Ameer
x

கட்சி ஆரம்பித்த எல்லோரும் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்று அமீர் கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் இயக்குனர் கரு.பழனியப்பன் நடத்திய மத நல்லிணக்க விழாவில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சி ஆரம்பித்த எல்லோரும் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்று கூறினார். அவர் கூருகையில்,

''நாட்டில் ஒருவருக்கு வாக்களிக்க எந்தளவு உரிமை உள்ளதோ, அதே அளவுக்கு கட்சி தொடங்கவும் உரிமை உள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்தபோது அதை நான் ஆதரித்தேன். பெரியாரையும், அம்பேத்கரையும் கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு ஒரு புதிய கட்சியை தமிழராக இருக்கும் உச்ச நடிகர் ஒருவர் தொடங்கியதால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் தரக்குறைவான விமர்சனங்கள் எப்போதும் இருக்கக்கூடாது. எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும், களத்தில், கருத்தியலை எதிர்கொள்ள வேண்டும்.

என் உயிர் மூச்சு உள்ளவரை பாசிசத்தையும், பா.ஜனதாவையும் எதிர்ப்பேன். விஜய் நடத்தியது மாநாடு போல் தெரியவில்லை. ரசிகர்கள் சந்திப்பாகவே இருந்தது. மக்களுக்கான கொள்கைகளை எடுத்து வைப்பவர்கள் மட்டுமே நிலைக்க முடியும். கட்சி ஆரம்பித்த எல்லோரும் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது '' என்றார்.

1 More update

Next Story