ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களில் இருந்து விஜயின் 'ஜனநாயகன்' படம் நீக்கம்!

நாளை ‘ஜனநாயகன்’ படம் வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களில் இருந்து விஜயின் 'ஜனநாயகன்' படம் நீக்கம்!
Published on

சென்னை,

"இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில், சினிமாவை விட்டு முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படமே விஜயின் கடைசி படம் என்பதால், இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படம் பெங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 'ஜனநாயகன்' படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை ஐகேர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் வழக்கு தெடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை (9-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி, ஜனவரி 9-ந்தேதி ஜனநாயகன் வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், புக் மை சோ, டிக்கெட் நியூ, டிஸ்டிரிக் ஆப் உள்ளிட்ட ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களில் இருந்து விஜயின் 'ஜனநாயகன்' படம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com