மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது விஜய்யின் 'ஜனநாயகன்' படம்

ஜனநாயகன் படக்குழுவினர் படத்திற்கு சென்சார் சான்று கோரி மறு தணிக்கைக்காக அனுப்பியுள்ளனர்.
மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது விஜய்யின் 'ஜனநாயகன்' படம்
Published on

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எச். வினோத் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்‌சன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக படம் வெளியாகவில்லை. இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், ஒரு மாதமாக படம் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் படக்குழுவினர் படத்திற்கு சென்சார் சான்று கோரி மறு தணிக்கைக்காக அனுப்பியுள்ளனர். படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகவும், படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் மறு தணிக்கை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com