ரீ-ரிலீஸாகும் விஜய்யின் 'சிவகாசி' திரைப்படம்

21 வருடங்களுக்கு பிறகு விஜய்யின் சிவகாசி திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
ரீ-ரிலீஸாகும் விஜய்யின் 'சிவகாசி' திரைப்படம்
Published on

சென்னை,

சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் ஹிட் திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் 'ரீ-ரிலீஸ்' கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கில்லி , படையப்பா, மங்கத்தா, சச்சின், மற்றும் 3 போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்துள்ளன.

அந்த வரிசையில், பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான `சிவகாசி' ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் அசின், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யின் சிவகாசி திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதாவது, வருகிற 24ந் தேதி இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com