டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் விஜய்யின் “ஜன நாயகன்”

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் விஜய்யின் “ஜன நாயகன்”
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ஜனநாயகன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தளபதி கச்சேரி , ஒரு பேரே வரலாறு பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் புக்கிட் ஜலீல் திடலில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

ஜன நாயகன் படத்தின் வெளிநாட்டு முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், இங்கிலாந்தில் அனைத்து டிக்கெட்டுகளும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன. ஜன நாயகன் படத்தின் 12,700 டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்று சாதனை படைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com