விஜய்யின் "ஜன நாயகன்" படப்பிடிப்பு அப்டேட்

'ஜன நாயகன்' விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் "ஜன நாயகன்" படப்பிடிப்பு அப்டேட்
Published on

சென்னை,

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9ம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது..மேலும், தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதியன்று இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்ததாகவும் முக்கியமான சண்டைக் காட்சி விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com