விஜயின் `ஜன நாயகன்’ படம் ரிலீஸாவதில் சிக்கல்..!

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜயின் `ஜன நாயகன்’ படம் ரிலீஸாவதில் சிக்கல்..!
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ஜனநாயகன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் 27ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் டிரெய்லர் வருகிற 2026 ஜனவரி 1ம் தேதி டிரெய்லர் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் ஜன நாயகன் படத்திற்கான வெளிநாட்டு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

ந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் ஆந்திரா, தெலங்கானா வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ஆந்திரா, தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக இருப்பதால் படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் இந்தியிலும் இதுவரை பெரியளவில் புரோமோஷன் செய்யாததால், அங்கேயும் மிக குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால், படத்தின் வசூலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com