விஜய்யின் 'ஜனநாயகன்' பட விவகாரம்: கருத்து சொல்ல மறுத்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்திடம் ‘ஜனநாயகன்’ படம் வெளிவராமல் முடக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
விஜய்யின் 'ஜனநாயகன்' பட விவகாரம்: கருத்து சொல்ல மறுத்த ரஜினிகாந்த்
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கமலும் நானும் நடிக்கும் படம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். ஜெயிலர் இன்னும் 2-3 நாள் ஷூட்டிங் இருக்கிறது. ரிலீஸ் தேதியை பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்” என்றார்.

அப்போது ‘ஜனநாயகன்’ படம் வெளிவராமல் முடக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், “சாரி... நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.

நடிகர்கள் பின்னால் சென்று நிறைய இளைஞர்கள் அடிபட்டு செல்வது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “இளைஞர்கள்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். படிக்கும் நேரத்தில் படிப்பில்தான் முழு கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டார்கள் என்றால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

படிப்பில் மட்டுமே சிந்தனை இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம், கஞ்சா ஆகியவற்றிற்கு அடிமையாகாதீர்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கையே கெட்டுப்போய்விடும். உங்கள் குடும்பத்தின் வாழ்க்கையையே நரகமாக்கி விடும். அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தாலும் அவர்களிடம் கூட போகாதீர்கள்... தள்ளி இருங்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com