விஜய் மேலாளர் என்னிடம் பேரம் பேசினார்- வேல்முருகன் பரபரப்பு பேச்சு

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கத்தி பட பிரச்சினையின் போது விஜய் மேலாளர் தன்னிடம் பேரம் பேசியதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
விஜய் மேலாளர் என்னிடம் பேரம் பேசினார்- வேல்முருகன் பரபரப்பு பேச்சு
Published on

சென்னை,

சென்னை வடபழனியில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் ராதாரவி, இயக்குனர் விக்ரமன், நடிகை அம்பிகா, பாடகர் அந்தோணி தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய வேல்முருகன், கத்தி பட பிரச்சினையின் போது விஜய் மேலாளர் தன்னிடம் பேரம் பேசியதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

வேல்முருகன் கூறியதாவது: கத்தி படத்தை நான் எதிர்த்தபோது, இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கின்ற விஜய் அவர்களுடைய மேலாளர், என்னிடம் வந்து பேரம் பேசினார்.

ஒரு பெரிய தொகையை நன்கொடையாக வழங்குவதாகவும், உங்கள் கட்சி நிர்வாகிகள் எல்லோருக்கும் வாகனங்கள் வாங்கித் தருகின்றேன் என்றும் பேசினார். ஆனால் இதுவரை யாரிடமும் அப்படி லஞ்சமோ, கமிஷனோ வாங்காதவன் நான். பொதுவாழ்க்கையில் ஒரு ரூபாய் கூட நன்கொடை வாங்கியது இல்லை. லஞ்சம், கையூட்டு பெறாத ஒரு அரசியல் தலைவன் நான்” என்றார்.

கடந்த 2014-ல் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படத்தை 'லைக்கா' நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த நிறுவனம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கத்தி படத்திற்கு எதிராக பெரும் போராட்டம் அப்போது நடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com