10 கோடி பார்வைகளைக் கடந்த "தி கோட்" படத்தின் "மட்ட" பாடல்


விஜய், திரிஷா நடனமாடிய ‘தி கோட்’ படத்தின் ‘மட்ட’ பாடல் வீடியோ 10 கோடி பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

சென்னை,

'லியோ' படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தி கோட் படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி வெளியானது. இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.126 கோடி வசூலித்தது. 'தி கோட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் பாடல் வீடியோ யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளைத் கடந்துள்ளது. படத்தில் நடிகை திரிஷா 'மட்ட' எனும் பாடலுக்கு விஜயுடன் நடமாடி இருந்தார். இதில் நடிகை திரிஷா கட்டியிருந்த மஞ்சள் சேலையும் வைரலானது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோட் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.



தற்போது, விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். நடிகை திரிஷா அஜித்துடன் நடித்த 'குட் பேட் அக்லி' படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்ததாக, தக் லைப், சூர்யா 45 படங்களில் நடித்து வருகிறார்

1 More update

Next Story