விஜய்யின் “தெறி” படத்தின் புதிய ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தெறி’ வரும் 27ம் தேதி ரீ-ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.
விஜய்யின் “தெறி” படத்தின் புதிய ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

அட்லி இயக்கிய தெறி படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன், சுனைனா உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்திருந்தார்.

இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

‘திரௌபதி 2’ படத்தின் ரிலீஸ்காக ஜனவரி 15ம் தேதி வெளியாக இருந்த ‘தெறி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘தெறி’ படம் வரும் 27ம் தேதி வெளியாகுமென தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com