ரீ-ரிலீஸாகும் விஜய்யின் “திருப்பாச்சி” திரைப்படம்

விஜய் நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான ‘திருப்பாச்சி’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாக உள்ளது.
ரீ-ரிலீஸாகும் விஜய்யின் “திருப்பாச்சி” திரைப்படம்
Published on

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படம் ரூ 32 கோடிகள் வசூல் செய்து விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமானது. இதற்கு அடுத்து பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த சிவகாசி படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பேரரசு இயக்கிய ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய், திரிஷா, மல்லிகா, பசுபதி, மனோஜ் கே ஜெயன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் மணி ஷர்மா, தீனா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளனர். படத்தின் ஏழு பாடல்களையும், இயக்குனர் பேரரசு எழுத, கட்டுக் கட்டு... பாடலை தேவிஸ்ரீ பிரசாத்தும், கண்ணும் கண்ணும் பாடலை மணி ஷர்மாவும், மற்ற பாடல்களுக்கு தீனாவும் இசையமைத்தனர். இப்படம் தெலுங்கில் அன்னவரம், கன்னடத்தில் தங்கிகாகி என்ற பெயரில், ரீமேக் செய்யப்பட்டது.

அண்ணன்- தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் விஜய்யின் அன்பு தங்கையாக நடிகை மல்லிகா நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் தனது தங்கையின் மகிழ்ச்சிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் எந்த அளவிற்கும் செல்லத் தயங்காத ஒரு அண்ணனின் பாசத்தை அவர் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், திருப்பாச்சி திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனை, திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com