"விக்ரம் 2" பற்றிய கேள்வி - கமல் கொடுத்த அப்டேட்


விக்ரம் 2 பற்றிய கேள்வி - கமல் கொடுத்த அப்டேட்
x

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த கமல் ‘தக்லைப்’ ரிலீஸ் குறித்தும், தன் அடுத்த படத்தை பற்றியும் பேசியுள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க அமெரிக்கா சென்று இருந்தார். கடந்த 5 மாதங்களாக படிப்பில் கவனம் செலுத்திய கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், 'தக்லைப்' படம் வருகிற ஜுன் 5-ந்தேதி வெளியாகும் என கூறினார். பின்னர் 'விக்ரம் 2' படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது வேறு ஒரு ஸ்கிரிப்டை எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல்ஹாசன், அன்பறிவ் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அமெரிக்காவில் கமல்ஹாசனை அன்பறிவ் சகோதரர்கள் நேரில் சந்தித்து படம் குறித்து பேசியுள்ளனர். இப்படம், டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் பெரிய பொருள்செலவில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story