விக்ரம் பிறந்தநாளில் வெளியான “விக்ரம் 63” பட அறிவிப்பு

‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் 63வது படம் உருவாகுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விக்ரம் பிறந்தநாளில் வெளியான “விக்ரம்  63” பட அறிவிப்பு
Published on

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் சீயானின் 63-வது படத்தை, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது.அதன் பிறகு, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பிலேயே சீயானின் 63-வது உருவாகவிருப்பதாகவும், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்படத்தை அடுத்து 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு வெளியான ‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் 63வது படம் உருவாகுவதாகப் படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர்களான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து, இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிவிப்பு வீடியோவில் ஒரு அரைக்குள் இருக்கும் விக்ரமை வில்லன்கள் சூழ்ந்திருக்க அசால்டாக உள்ளே உட்காந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அவருக்கு பில்டப் கொடுக்கும் வகையில் ‘அவன் சமையல் காரன், ஆனா சம்பவ கை’ என்ற வசனங்களும் வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com