விக்ரமின் “சியான் 63” படப்பிடிப்பு தொடக்கம்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் 63வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
விக்ரமின் “சியான் 63” படப்பிடிப்பு தொடக்கம்
Published on

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் சீயானின் 63-வது படத்தை, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது.அதன் பிறகு, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பிலேயே சீயானின் 63-வது உருவாகவிருப்பதாகவும், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்படத்தை அடுத்து 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

2016 ஆம் ஆண்டு வெளியான ‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் 63வது படம் உருவாகுவதாகப் படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர்களான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வைரலானது.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்வம் மாயா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரியா ஷிபு, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் அவர்களின் மகள் ஆவார்.

ஆனந்த் ஷங்கருடனான படத்திற்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றும் முயற்சியிலும் இருப்பதால் உடல்பயிற்சிகளைத் தீவிரமாக செய்து வந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியா ஷிபு நாயகியாக நடிக்க நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com